Welcome Guest  |   New Post  |   My Post

நஸ்ரியாவின் காதல் ரகசியம்இதுநாள் வ...

Add New Post

நஸ்ரியாவின் காதல் ரகசியம்இதுநாள் வரை மறைத்து வைத்திருந்த தனது காதல் ரகசியத்தினை வெளியிட்டுள்ளார் நஸ்ரியா நஸிம்.

நயன்தாரா சாயலில் இருக்கும் நஸ்ரியா தான் இப்போது கோடம்பாக்கத்தின் கனவுக்கன்னி.

ஜெய்யைக் காதலிக்கிறார் என்று கிசுகிசு வந்த பிறகும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆர்யா, தனுஷுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கிறார்.

சொந்த வாழ்க்கையில வந்த காதல் விண்ணப்பங்களைப் பத்தி சொல்லுங்கன்னு கேட்டா, நான் ரொம்ப சின்னப் பொண்ணுப்பானு ஒதுங்கப் பார்க்கிறாராம்.

சொல்லியே ஆகணும்னு திரும்பத் திரும்பக் கேட்டதும் தான் ரகசியம் உடைத்துள்ளார்.

நான் ரெண்டாங் கிளாஸ் படிச்சுக்கிட்டு இருந்தபோதே ஒரு பையன் லவ் லெட்டர் கொடுத்து ஓடிட்டான். அதுல இருந்து நிறைய விண்ணப்பங்கள் வர ஆரம்பிச்சது. எல்லாத்தையும் ஞாபகம் வச்சிருக்கேன்.

ஆனால் எதையும் கவுண்ட் பண்ணலை. எப்படியும் ஐம்பதைத் தாண்டி இருக்கும். இப்பவும் நிறைய விண்ணப்பங்கள் வந்துக்கிட்டே இருக்கு.

என் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் பொக்கே, கார்டு, கிப்ட்டை என் வீட்டு வாசல்ல வச்சிட்டு போறாங்க. அது யார்னு இன்னும் தெரியலை.

ஆனா அந்த கிப்ட்டை பத்திரமா வெச்சிருக்கேன். அந்த கிப்ட் பார்ட்டி யார்னு உங்களுக்குத் தெரிஞ்சா சொல்றீங்களான்னு? கேட்கிறாராம் நஸ்ரியா.
Posted On : Aug 30, 2013
Category : Tamil Movie Actress
Total Visit : 2264
Total Comments : 0
Share
Buffer
Pin it

Leave a Reply

Tamil English

Message