Welcome Guest  |   New Post  |   My Post

ஹாலிவுட்டில் கால்பதிக்கும் ஜி.வி.பி...

Add New Post

ஹாலிவுட்டில் கால்பதிக்கும் ஜி.வி.பிரகாஷ்

 ஹாலிவுட்டில் இசையமைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ராஜா ராணி வரை நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவர் பிரபலம்.

அண்மையில் இந்தி படம் ஒன்றிலும் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது ஹாலிவுட் படத்திற்கும் இசையமைக்க உள்ளாராம்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய டுவிட்டரில், விரைவில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகிறேன்.

இந்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட பட நிறுவனமே விரைவில் அறிவிக்கும். அதுவரைக்கும் பொறுத்திருங்கள் என்று கூறியுள்ளார்.

Posted On : Sep 03, 2013
Category : Tamil Movie Actors
Total Visit : 1756
Total Comments : 0
Share
Buffer
Pin it

Leave a Reply

Tamil English

Message