Welcome Guest  |   New Post  |   My Post

ஹாரிஸ் இடத்தில் அனிருத்

 பிர...

Add New Post

ஹாரிஸ் இடத்தில் அனிருத்

 பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இடத்தை நிரப்பவுள்ளார் கொலைவெறிப் புகழ் அனிருத்.

செல்வராகவனின் பிரம்மாண்டமான இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இரண்டாம் உலகம்.

இப்படத்தில் ஆர்யா, அனுஷ்கா இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர், ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. 

இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது ஹாரிஸ் ஜெயராஜ், இரண்டாம் உலகம் மட்டுமின்றி நான்கு பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இதனால் இப்படத்தின் பின்னணி இசையமைப்பு பணிகளில் இருந்து விலகிக் கொண்டார் ஹாரிஸ்.

அதனால், ஹாரிஸ்க்கு பதிலாக தற்போது கொலைவெறிப் புகழ் அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏற்கெனவே அனிருத், தனுஷுக்கு செல்லப்பிள்ளை என்பது ஊரறிந்த விடயம். இப்பொழுது அவரது சகோதரரான செல்வராகவனுடனும் கைகோர்ப்பதால், தீயா வேலையில் களமிறங்கிவிட்டார் அனிருத்.

இப்படம் வருகிற தீபாவளி பட்டாசுகளில், அஜித்தின் ஆரம்பம், கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜா, விஷாலின் பாண்டிய நாடு ஆகியப் படங்களுடன் வெடிக்கவிருக்கிறது.

Posted On : Sep 24, 2013
Category : Tamil Movie Actress
Total Visit : 2186
Total Comments : 0
Share
Buffer
Pin it

Leave a Reply

Tamil English

Message