Welcome Guest  |   New Post  |   My Post

புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாகும்...

Add New Post

புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாகும் உயிருக்கு உயிராக

 கோலிவுட்டில் புதிய தொழில்நுட்பங்களுடன், வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகி வருகிறது உயிருக்கு உயிராக.

மண்ணுக்குள் வைரம், வானவில், ராஜ்ஜியம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் மனோஜ்குமார்.

 

இவர் தனது பெயரை விஜய மனோஜ்குமார் என்று மாற்றி கொண்டுள்ளார்.

 

இந்நிலையில் தற்போது இயக்கும் புதிய படத்திற்கு உயிருக்கு உயிராக என தலைப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், படிக்கும் காலத்தில் பிள்ளைகள் காதல் வயப்பட்டு தடுமாறுகின்றனர்.

அந்த நேரத்தில் பெற்றோர்தான் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற கருவுடன், நமது மாணவர்களின் மூளை எவ்வளவு மகத்தானது என்று சொல்லும் விதமாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஏரோநாட்டிக்கல் இன்ஜினியர், கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆகிய 2 பேர் ஒன்று சேர்ந்து எதிர்காலத்தில் நடக்கவுள்ள விமான படை போரை எப்படி கட்டுப்படுத்துவது என்ற புதிய கண்டுபிடிப்பை உருவாக்குகிறார்கள்.

அது ஏன் என்ற கேள்விகளுக்கு படம் பதில் சொல்லும். நவீன தொழில்நுட்பங்களுடன் படம் உருவாகி இருக்கிறது.

இதில் சஞ்சீவ்- நந்தனா, சரண்குமார்- பிரீத்திதாஸ் ஜோடிகளுடன் பலர் நடித்திருக்கின்றனர்.

கோவை தம்பியின் தயாரிப்பில், ஆனந்த்குமாரின் ஒளிப்பதிவில், சாந்தகுமார் இசையமைக்கிறார்.

Posted On : Sep 06, 2013
Category : Tamil Movie Actress
Total Visit : 2025
Total Comments : 0
Share
Buffer
Pin it

Leave a Reply

Tamil English

Message