Welcome Guest  |   New Post  |   My Post

பாலிவுட்டில் களமிறங்கும் கமலின் இளை...

Add New Post

பாலிவுட்டில் களமிறங்கும் கமலின் இளைய மகள் அக்ஷரா

இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா.

சில இந்தி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார் அக்ஷரா ஹாசன்.

இவரை கதாநாயகியாக நடிக்க வைக்க நிறைய பேர் கேட்டுள்ளனர் ஆனால் நடிப்பில் ஆர்வம் இல்லை இயக்குனராக விரும்புகிறேன் என மறுத்து வந்தார் அக்ஷரா.

இப்போது திடீரென கதாநாயகியாக நடிக்க அவர் முடிவு செய்துள்ளார்.

கும்பகோணத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்கிற பால்கி, பாலிவுட்டில் இயக்குனராக உள்ளார்.

இவர் கமல்ஹாசனின் நண்பர். இந்தியில் அமிதாப் நடிப்பில் சீனி கம், பா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இப்போது இவர் அடுத்து இயக்கும் படத்தில்தான் அக்ஷரா நடிக்க உள்ளார்.

இதற்கிடையே அக்கா ஸ்ருதியை போல மும்பையில் தனியாக வசிக்க அக்ஷரா முடிவு செய்துள்ளாராம்.

முதலில் இயக்குனர், பிறகு நடிப்பு என அக்ஷரா மாறி மாறி முடிவு எடுத்தாலும் அவரது சுதந்திரத்தில் அப்பா கமல், அம்மா சரிகா தலையிட விரும்பவில்லையாம்.

Posted On : Sep 03, 2013
Category : Tamil Movie Actress
Total Visit : 2022
Total Comments : 0
Share
Buffer
Pin it

Leave a Reply

Tamil English

Message