Welcome Guest  |   New Post  |   My Post

சோலோவாக வந்த போஸ் பாண்டியன்

 ...

Add New Post

சோலோவாக வந்த போஸ் பாண்டியன்

 சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் போட்டியே இல்லாமல் சோலோவாக இன்று வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது.

இவர் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் என இரண்டு படங்களுமே வெற்றிப் படங்கள் தான்.

இந்நிலையில் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் இன்று வெளியாகியுள்ளது.

விஷாலின் மதகஜராஜா இன்று 800 தியேட்டர்களில் வெளியாகவிருந்த நிலையில், அந்தப் படம் தள்ளிப் போனதால் சோலோவாகக் களமிறங்கியது வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

பொன்ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், சூரி, ஸ்ரீ திவ்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

டி இமான் இசையில் ஏற்கெனவே பார்க்காதே, ஊதா கலரு ரிப்பன் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

இந்தப் படமும் ஜெயித்தால், இந்த ஆண்டு ஹாட்ரிக் நாயகன் பட்டியலில் சிவகார்த்திகேயன் இடம்பெறுவார்.

Posted On : Sep 06, 2013
Category : Tamil Movie Actress
Total Visit : 1727
Total Comments : 0
Share
Buffer
Pin it

Leave a Reply

Tamil English

Message