Welcome Guest  |   New Post  |   My Post

கத்ரினாவிடம் காதலை சொல்லும் ரன்பீர்...

Add New Post

கத்ரினாவிடம் காதலை சொல்லும் ரன்பீர்

 தனது காதலை கத்ரினாவிடம் மனம் திறந்து சொல்லப்போகிறாராம் ரன்பீர் கபூர்.

பாலிவுட்டில் கத்ரினா, ரன்பீர் இருவருக்கும் காதல் என்று பல கிசுகிசுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதனை உறுதி உறுதி செய்யப்போகிறாராம் ரன்பீர் கபூர்.

வழக்கமாக எல்லோரும் விரலில் மோதிரம் போட்டு காதலையும், திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தையும் தெரிவிப்பார்கள்.

ஆனால் இதில் வித்தியாசமாக செயல்படப் போகிறாராம் ரன்பீர்.

அதாவது கத்ரினா காதில் வைரத் தோடை அணிவிக்கும் முடிவில் இருக்கிறாராம் அவர். அந்தத் தோடைக் கூட அவர் ஏற்கனவே வாங்கி விட்டதாக சொல்கிறார்கள்.

இந்த வைரைத் தோட்டை தனது பிறந்த நாளன்று கத்ரினா காதில் மாட்டி தனது திருமண விருப்பத்தை சொல்லப் போகிறாராம் ரன்பீர்.

கத்ரினாவைத் திருமணம் செய்து கொள்ள ரன்பீர் விரும்பினாலும் கூட அவரது வீட்டிலிருந்து இன்னும் முழுமையான சம்மதம் வரவில்லையாம்.

இருப்பினும் தனது பெற்றோரையும், குடும்பத்தினரையும் ரன்பீர் சமாதானப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

Posted On : Sep 01, 2013
Category : Tamil Movie Actors
Total Visit : 1794
Total Comments : 0
Share
Buffer
Pin it

Leave a Reply

Tamil English

Message